Published : 17,Dec 2020 09:47 PM

“கோலி ரன் அவுட்டானது எனக்கு வருத்தம்தான்” - ஷேன் வார்னே 

FORMER-AUSTRALIA-CRICKETER-SHANE-WARNE-ON-INDIAN-CAPTAIN-VIRAT-KOHLI-S-RUN-OUT-IN-THE-FIRST-TEST-MATCH-AGAINST-AUSTRALIA

“கோலி ரன் அவுட்டானது எனக்கு வருத்தம்தான்” என ஷேன் வார்னே தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் கேப்டன் கோலி 74 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அது தான் இன்றைய ஆட்டத்தின் திருப்புமுனையும் கூட. 

image

இந்நிலையில் அது குறித்து தனது கருத்தை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்தார்.

“விராட் கோலி மாதிரியான மகத்தான பேட்ஸ்மேன் ரன் அவுட்டாவதை பார்க்கும்போது ஏமாற்றத்தினால் மனம் வருத்தம் அடைகிறது. அவர் கிரீஸுக்கு வரும்போது பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என எல்லோரும் சொல்லலாம். அதை உறுதியோடு அவர் செய்தும் கொண்டிருந்தார். நம் போன்ற கிரிக்கெட் பிரியர்கள் ஒவ்வொருவரும் இதற்காக விம்மி தலைகுனிய வேண்டும்” என ட்விட்டரில் தெரிவித்தார்.

இந்த இன்னிங்ஸ் உட்பட டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை இரண்டு முறை மட்டுமே ரன் அவுட்டாகி உள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்