[X] Close

முதல்வர் பழனிசாமியும் பிக்பாஸ் பார்ப்பதில் மகிழ்ச்சி: கமல்ஹாசன்

தமிழ்நாடு

Kamal-Hassan-reply-to-CM-Palanisamy

முதல்வர் பழனிசாமியும் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமியின் கடும் விமர்சனத்தை ஸ்மைலியுடன் எதிர்கொண்டிருக்கிறார் கமல்ஹாசன்.


Advertisement

அரியலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது "லஞ்சம் ஊழலில் அரசு எவ்வழியோ அதிகாரிகள் அவ்வழி’ என்று கமல் தெரிவித்து கருத்து குறித்து முதல்வர் பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ‘’கமல் ரிட்டையர்ட் ஆகி அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு 70 வயது ஆகிறது. இந்த வயதில் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படியிருக்கும்? இந்நிகழ்ச்சியை பார்க்கும் ஒரு குடும்பம் கூட நல்லாயிருக்காது.

image


Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்படி என்ன இருக்கிறது? சொல்லுங்க பார்க்கலாம். கமல் நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதாக இல்லை. நல்லாயிருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவர் வேலை. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை கெட்டுப் போவார்கள்.

எம்.ஜி.ஆர் நாட்டு மக்களுக்கு பயன்படும்படி எவ்வளவு பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா? அவருடைய படத்தை பார்த்தால் அதோடு அந்தக் குடும்பம் காலி. அதனால் கமல் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமியின் விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ள கமல்ஹாசன், "முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று ஸ்மைலி தட்டிவிட்டிருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close