[X] Close

பா.ஜ.க.விடம் வாக்காளர் பிரவைசி தகவல்கள் கிடைப்பது எப்படி? - தெலங்கானாவில் புதிய சர்ச்சை

இந்தியா,தேர்தல் களம்

New-controversy-in-Telangana-questions-raised-that-how-BJP-gets-privacy-details-of-voters

தெலங்கானா மாநில தகவல் பாதுகாப்பு வல்லுநர்கள், ஆய்வாளர்கள், வாக்காளர்களின் போன் நம்பர், இ-மெயில் ஐ.டி போன்ற தகவல்கள் அரசியல் கட்சிகளுக்குக் கசிந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஆதாரத் தகவல்களும் வெளியாகியுள்ளன.


Advertisement

தகவல் பாதுகாப்பு நிபுணரான ஸ்ரீனிவாஸ் கோடலி என்பவர் தொடர்ந்து தனிநபர் பிரைவசி குறித்த பல பிரச்னைகள் குறித்து பேசி வருகிறார். இதற்கிடையே, இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் தெலங்கானா மேலவைத் தேர்தலுக்கு வாக்களிக்க தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்திருக்கிறார் ஸ்ரீனிவாஸ் கோடலி. இவர் பதிவுசெய்த சில மணிநேரங்களில் பா.ஜ.க தரப்பில் இருந்து இவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.

இவருக்கு மட்டுமல்ல, தெலங்கானாவின் சட்ட மேலவை தேர்தலுக்குப் பதிவு செய்திருந்த வாக்காளர்கள் பலருக்கு இதேபோன்று பாஜக தரப்பில் இருந்து எஸ்.எம்.எஸ் சென்றுள்ளது. அந்த எஸ்.எம்.எஸ், ``I am delighted to inform you that you have been enrolled as a voter in MBNR-RR-Hyd graduates MLC constituency. Looking forward for your support and blessings to give me another opportunity to work for better society. - N Ramchanddar Rao MLC" என்று தங்களுக்கு ஆதரவுகோரி பாஜக தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.


Advertisement

image

இதை தனது ட்விட்டரில் பதிவிட்ட ஸ்ரீனிவாஸ் கோடலி, ``இது ஒரு தனி சம்பவம் அல்ல. அனைவரின் வாக்காளர் விவரங்களையும் பாஜக தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்று வருகிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ``என்னுடைய தனிப்பட்ட தகவல்கள் எப்படி பாஜகவுக்கு கிடைத்தது. ஒரு வாக்காளரின் தனிப்பட்ட உரிமையை பாதுகாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. இதுபோன்ற தகவல் தேர்தல் ஆணையத்தின் மூலமாக கசிந்ததா இல்லை வேறு ஏதேனும் வழிகளில் கசிந்ததா என்பதை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இவரைப் போன்றே தெலங்கானா மாநில தகவல் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள், வாக்காளர்களின் போன் நம்பர், இ-மெயில் ஐடி போன்ற தகவல்கள் அரசியல் கட்சிகளுக்குக் கசிந்துள்ளது என்று குற்றம்சாட்டி, இது தொடர்பாக உடனடியாக விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


Advertisement

இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுகுறித்து விசாரிக்கப்படும் எனத் தெலங்கானாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி சஷாங்க் கோயல் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close