[X] Close

விஷால்,ஆர்யா நடிக்கும் ‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சினிமா

enemy-first-look-poster

விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.


Advertisement

இயக்குநர் பாலா இயக்கத்தில் ‘அவன் இவன்’ திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் விஷால், ஆர்யா இருவரும் போட்டிக்கொண்டு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினர். ’அவன் இவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் ’எனிமி’ திரைப்படம் விஷாலின் 30 வது படமாகவும் ஆர்யாவின் 32 வது படமாகவும் வெளியாகவிருக்கிறது. 

image


Advertisement

இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், 9 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளனர். விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார்.


Advertisement

இயக்குநர் ஆனந்த் சங்கர் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் ‘அரிமா நம்பி’, 2016 ஆம் ஆண்டு விக்ரம், நயன்தாரா நடிப்பில் ‘இருமுகன்’, 2018 ஆம் ஆண்டு விஜய் தேவாரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’ படங்களை இயக்கியிருந்தார். விஷாலுக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார்.

image

இந்நிலையில், ’எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷால், “அன்புள்ள எதிரி ஆர்யா, இனி நீ  என் சிறந்த நண்பன் அல்ல. நீ என் மோசமான எதிரி என்பதை உறுதிப்படுத்தப்போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close