சென்னை: நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்துச் சென்ற இருவர் கைது

சென்னை: நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்துச் சென்ற இருவர் கைது
சென்னை: நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்துச் சென்ற இருவர் கைது

நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல நடிகர் கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக். இயக்குநர் மணிரத்னத்தின் ‘கடல்’ படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ‘ஹர ஹர மகாதேவ்கி’,‘தேவராட்டம்’, ‘இவன் தந்திரன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில், சைக்கிளில் பயிற்சி மேற்கொண்டிருந்த கெளதம் கார்த்திக்கை தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரின் விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதனையடுத்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கௌதம் கார்த்திக்கிடம் செல்போன் பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மயிலாப்பூர் குயில் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், திருட்டு செல்போனை விலைக்கு வாங்கியதாக ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பைரூஸ்கான் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com