Published : 16,Dec 2020 04:56 PM

“ஆஸ்திரேலியாவில் பிருத்வி ஷாவின் ஆட்டத்தை பார்க்க ஆர்வத்துடன் உள்ளேன்” - கோலி

EAGER-TO-WATCH-Prithvi-Shaw-S-play-in-Australia-SAYS-INDIAN-CAPTAIN-VIRAT-KOHLI-INDIA-VS-AUSTRALIA

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நாளை அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார் கேப்டன் விராட் கோலி. 

image

இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷாவின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் கோலி. 

“முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார் பிருத்வி ஷா. அவரது ஆட்டத்தை பார்க்க நான் மிகவும் ஆரவத்துடன் உள்ளேன் என கருதுகிறேன். இதே போல மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் ஜொலிப்பார்” என கோலி தெரிவித்துள்ளார். 

image

பயிற்சி ஆட்டத்தில் பிருத்வி ஷா சரிவர விளையாடவில்லை என்றாலும் இந்திய அணியின் நிர்வாக குழுவினரின் நம்பிக்கையை பெற்றுள்ளதால் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்