Published : 16,Dec 2020 11:41 AM

58 நிமிடத்தில் 46 வகையான பாரம்பரிய உணவு சமையல்... உலக சாதனை படைத்த சென்னை சிறுமி

Tamil-Nadu-Girl-Creates-World-Record-By-Cooking-46-Dishes-In-58-Minutes

ஒரு மணி நேரத்தில் 46 வகையான உணவுகளை சமைத்து தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி சாதனை படைத்துள்ளார்.

மக்கள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதை குறைக்கும் விதமாகவும், அனைவரும் வீட்டில் சமைத்து சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி சாய் ஸ்ரீ என்ற சிறுமி, ஒரு மணி நேரத்தில் 46 வகையான பாரம்பரிய உணவுகளை சமைக்கும் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

அதன்படி, வெறும் 58 நிமிடங்களில் 46 வகையான உணவுகளை சமைத்து அசத்தினார். இது, உலக சாதனை யுனிகோ தலைமை நீதிபதி ஆர் சிவராமனால் அங்கீகரிக்கப்பட்டதுடன், ஒரு மணிநேரத்தில் 33 வகை உணவுகளை தயாரித்த கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாதனைச் சிறுமி, “ எனக்கு சமையல் கலையில் அதிக அளவு ஆர்வம் இருந்தது. என அம்மா தகுந்த பயிற்சி வழங்கி எனது இந்த சாதனைக்கு வழிகாட்டியாக இருந்தார்”என்றார்.

இதைத் தொடர்ந்து, சிறுமியின் தாயார் பேசும்போது, “எனது மகள் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒரு முறை சொல்லும்போது, அதை எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் திறமை கொண்டவர். அவளுக்கு சமையல் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே மகளுக்கு பயிற்சி அளித்தேன். அதை எ விரைவாக உள்வாங்கி கொண்டார். எனது மகள் இந்த சாதனை படைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்