[X] Close

வேலைக்காரனுக்காக சிவகார்த்திகேயனுடன் இணைந்த பகத் ஃபாசில்!

Fahad-Fazil-joins-with-Sivakarthikeyan

 

முதன்முறையாக தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார் மலையாள நடிகரான பகத் ஃபாசில்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் வேலைக்காரன் படத்தில் பகத் ஃபாசில் நடிக்க இருக்கிறார். அவருக்கு முக்கிய கதாபாத்திரம் தரப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தில் நயன்தாரா, ஆர்ஜே.பாலாஜி, சதிஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையத்து வருகிறார்.
முதன்முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில் நடித்துள்ள அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிக்கப்பட்டு விட்டன. தற்போது பகத் ஃபாசில் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மலையாள சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள பகத் ஃபாசில் இந்தப்படத்தில் நடிப்பதால் மல்லுவுட்டிலும் வேலைக்காரன் படத்திற்கு வியாபார வாய்ப்பு அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. 
மோகன் ராஜா இயக்கிய தனியொருவன் மாபெரும் வெற்றி பெற்றதாலும், சிவகார்த்திகேயன் நடித்த கடைசிப் படமான ரெமோ அமோக வரவேற்ப்பை பெற்றதாலும் அவர்கள் இருவரும் இணைந்துள்ள  வேலைக்காரன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close