ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பிரச்னையே ஒவ்வொரு பெண்களுக்கும் 7 முதல் 8 குழந்தைகள் இருப்பதுதான் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசியதற்கு சமூகவலைதளங்களில் வறுத்தெடுக்கிறார்கள்.
ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் கடந்த 7,8 ஆகிய தேதிகளில் நடந்த ஜி20 மாநாட்டில் ஆப்பிரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் பேசினார். அந்த பேச்சு குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கூட்டத்தில் பேசிய அவர், பொருளாதாரரீதியாகவோ, சூழல் ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஆப்பிரிக்கக் கண்டம் பிரச்னையை எதிர்கொள்ளவில்லை. மாறாக பூகோளரீதியிலேயே ஆப்பிரிக்கா பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. ஒரு பெண்ணுக்கு 7 முதல் 8 குழந்தைகள் இருக்கும் போது, அங்கு செலவுகள் அதிகரிக்கும். இதனால் அரசுகளால் நிலையாக எதையும் திட்டமிட்டு நிறைவேற்ற முடியாது என்று அவர் பேசியிருந்தார்.
மாக்ரோனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர். ஆப்பிரிக்கக் கண்டத்தை பெரு நிறுவனங்கள் கொள்ளையடித்ததாலேயே அங்கு பஞ்சம் நிலவுகிறது என்று குறிப்பிட்டுள்ள இணையவாசி ஒருவர், அதைவிடுத்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஒரு நாட்டின் அதிபர் கருத்துத் தெரிவித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பதிவிட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் பிரச்னைகளுக்கு குழந்தைகளைக் குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'