Published : 13,Dec 2020 07:20 PM

ஈஸ்வரன் படத்தின் “தமிழன் பாட்டு” - வெளியாகும் நேரத்தை வெளியிட்ட சிலம்பரசன்!

First-single-song-from-Eeswaran-movie--silambarasan-who-released-the-release-time

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தின் முதல் சிங்கள் பாடலான “ தமிழன் பாட்டு” வெளியாகும் தேதியை சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்திற்காக நடிகர் சிலம்பரசன் கடினமான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்த, நிலையில் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. அதில், சிம்பு பாம்பை கையில் வைத்திருந்தது சர்ச்சையாகி விலங்கு நல வாரியம் கண்டனம் தெரிவித்த நிலையில், அது குறித்து படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

image

இந்நிலையில் ஈஸ்வரன் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ள “ தமிழன் பாட்டு” நாளை (திங்கள்கிழமை) காலை பத்து மணிக்கு வெளியாகும் என்றும் லிரிக் வீடியோ மாலை 4. 50 மணிக்கு வெளியாகும் என்றும் சிலம்பரசன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்புகளை முடித்த சிலம்பரசன் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்