தேனி: பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து சாவகாசமாக திருடிச்சென்ற மர்ம நபர் - போலீசார் விசாரணை

தேனி: பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து சாவகாசமாக திருடிச்சென்ற மர்ம நபர் - போலீசார் விசாரணை
தேனி: பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து சாவகாசமாக திருடிச்சென்ற மர்ம நபர் - போலீசார் விசாரணை

பட்ட பகலில் திறந்திருந்த கடையில் கல்லாவை உடைத்து பணத்தை திருடிச்செல்லம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் சீராலன் என்பவர் எலக்ட்ரிகல்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் இரண்டு மணி அளவில் கடையை திருந்து வைத்து விட்டு கடைக்கு பின்புறம் உள்ள தனது வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார்.


அப்போது கடையில் யாரும் இல்லாதை அறிந்த நபர் ஒருவர், கடைக்காரர் போல் கடைக்குள் வந்து சாகசமாக கல்லாவை உடைத்து, அதில் இருந்த 20 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றுள்ளார். பின்னர் கடைக்கு திரும்பி வந்த சீராலன் கல்லா உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் உடனே பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த மர்ம நபரை பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com