[X] Close

வடபழனியில் வன்முறை... கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

Police-brought-under-control-vadapalani

சென்னை வடபழனியில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, நேற்றிரவு காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜல்லிக்கட்டுக்காக மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த போராட்டக்காரர்கள் வெளியேறிய பிறகு, சென்னையின் பல பகுதிகளிலும் அசாதாரண சூழல் உருவானது. அடையாளம் தெரியாத நபர்களாலும், சமூக விரோத குழுக்களாலும் வன்முறையைத் தூண்டும் செயல்கள் அரங்கேறின.

நேற்று இரவு வடபழனி காவல்துறை ஆய்வாளரின் வாகனம் சிலரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனமும் தீ வைக்கப்பட்டுள்ளது. எம்.எம்.டி.ஏ பகுதி 100 அடிசாலையில் உள்ள ஒரு டாஸ்மாக்கும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த கலவரச்சூழல் காரணமாக சிம்ஸ் மருத்துவமனை, எம்.எம்.டி.ஏ பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. கலவரத்தில் வடபழனி மெட்ரோ நிலையம், தனியார் உணவு விடுதிகளின் கண்ணாடி கதவுகள், போர்டுகளும் சேதப்படுத்தப்பட்டன. நேற்று இரவு 7.30 மணி அளவில் வடபழனி - கோயம்பேடு சாலையில் வடபழனியை நோக்கி வந்த சுமார் 200 பேர் கொண்ட கலவர கும்பல் இந்த நாசவேலைகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.


Advertisement

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், கலவரக்காரர்களை அடித்து விரட்டினர். அப்போது, காவல்துறையினர் மீது கற்களை வீசிவிட்டு அக்கும்பல் ஓடிவிட்டது. இதையடுத்து, காவல்துறையினர் 5 முறை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு எச்சரிக்கை விடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிகிறது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக 5 பேரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close