[X] Close

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி ட்விட்டரை தெறிக்கவிட்ட பிரபலங்கள்!

சினிமா

rajini-birthday

நடிகர் ரஜினியின் 70 வது பிறந்தநாளை சினிமா துறையினரும் அவரது ரசிகர்களும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள், இந்த வருடம் ரஜினியின் 70 வது பிறந்தநாள் என்பது ரஜினி கூறுவது போலவே, அவருக்கு எழுச்சியான பிறந்தநாள்தான். அரசியலுக்கு வருகிறேன் என்று உறுதியாக தெரிவித்ததால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரபலங்கள்  வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

image

தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் அரசியல்வாதியுமான நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்புள்ள ரஜினிகாந்துக்கு 70 வது பிறந்தநாள் வாழ்த்துகள். அரசியல் முயற்சியில் நீங்கள் வெற்றிபெற விரும்புகிறேன். உங்கள் தனித்துவமான ஸ்டைலால் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள்” என்று பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.


Advertisement

”இந்திய சினிமாவின் தூண் நீங்கள் ரஜினி சார். வாழ்க்கையில் வெற்றியும் உலகில் அனைத்து மகிழ்ச்சியும் கிடைக்க விரும்புகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தமிழின் முன்னணி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் வாழ்த்தியுள்ளார்.


Advertisement

தெலுங்கின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில், ”லட்சக்கணக்கான ரசிகர்களை ஊக்குவியுங்கள். சினிமா பாணியை மாற்றியமையுங்கள். நல்ல உடல்நலத்துடன் சந்தோஷமும் அமைதியும் கிடைக்கவேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் சார்’ என்று தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகர் நிவின் பாலி “நம் அனைவருக்கும் ஊக்கமளித்ததற்கு நன்றி. மிகுந்த ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அற்புதமான ஆண்டை நீங்கள் கழிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்” என்று  வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அன்புக்குரிய தலைவா. நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை கடவுள் உங்களுக்கு ஆசிர்வதிப்பார். திறமையான தலைமையின் அற்புதங்களை மிக விரைவில் நீங்கள் எங்களுக்கு ஆசிர்வதிப்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எளிமைக்காகவும் கடின உழைப்புக்காகவும் நான் எப்போதும் வியக்கும் எங்களின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடவுள் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஆசிர்வதிப்பாராக” என்று பதிவிட்டுள்ளார்.

   “இந்திய சினிமாவின் சுருக்கம் நீங்கள். இந்த ஆண்டு அனைத்து வெற்றிகளையும் நல்ல ஆரோக்கியமுடன் வாழ வாழ்த்துகிறேன். எப்போதும்போல எங்களுக்கு ஊக்கமாக இருங்கள்’ என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

”இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கையத்தையும்  கொடுப்பார்” என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கள் தெரிவித்துள்ளார்.

இதேபோல, நடிகர் மோகன்லால்,நடிகை ரூபினி, நதியா, ஆர்யா, சிவகார்த்திகேயன், ரோஜா, நிக்கி கல்ராணி என திரைத்துறையினரு பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement
[X] Close