[X] Close

’சூப்பர் ஸ்டார் உங்க ஃபேன் வந்திருக்கேன்.. வாங்க’: ரஜினி வீட்டு வாசலில் கதறி அழுத ரசிகை!

சினிமா

rajini-fan-viral-video

ரஜினியின் தீவிர ரசிகை ஒருவர் போயஸ் கார்டன் இல்ல வாசலில் நின்று அழுதுகொண்டே ரஜினியை அழைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகர் ரஜினியின் 70 வது பிறந்தநாளை சினிமா துறையினரும் அவரது ரசிகர்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அரசியலுக்கு வருகிறேன் என்று உறுதியாக தெரிவித்ததால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் குவிந்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், என அனைத்து தரப்பினரும் ரஜினியின் வீட்டின் முன்பு குவிந்துவரும் நிலையில், ரஜினி ரசிகை ஒருவர் அவரின் வீட்டின் முன்பு கதறி அழுதுகொண்டே அவரை அழைக்கும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. 


Advertisement

பெங்களூருவில் இருந்து சென்னை வந்த ரஜினியின் ரசிகை ஒருவர், காலையிலேயே பிறந்தநாள் வாழ்த்துக்கூற அவரது இல்லத்திற்கு வந்துவிட்டார். அவர் குழந்தைப்போல் ரஜினியைத் தேடி கதறி அழுதது வைரல் ஆகியுள்ளது.

image

 “சூப்பர் ஸ்டார்…சூப்பர் ஸ்டார்… உங்க ஃபேன் வந்திருக்கேன் வாங்க. சூப்பர் ஸ்டாருக்கு ஜே.. சூப்பர் ஸ்டாருக்கு ஜே… உங்களை பார்க்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை சார். ஆனா, பார்க்க விட மாட்டுறாங்க” என்று கதறி அழுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close