திருவனந்தபுரம் அருகே நாயை காரில் கட்டி இழுத்துச்சென்ற ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில், கார் ஒன்றின் பின்புறம் நாய் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் கார் செல்லும்போது நாய் பின்புறமாக ஓடுகிறது. ஆனால் சிறிது நேரத்தில் நாய் கீழே விழுந்து சாலையில் தரதரவென இழுத்துச்செல்லப்படுகிறது. இதற்கு சமூக வலைதளவாசிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவனந்தபுரம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த யூசுப் என்பதும் அவர் கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநராக உள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “காரை இயக்கிய யூசுப் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவர் மீது விலங்குகளை கொல்வது, விஷம் கொடுப்பது, துன்புறுத்துவது அல்லது பயனற்றதாக ஆக்குவது மற்றும் விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் குடியிருக்கும் பகுதியில் அந்த நாய் நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளது. அதை வேறுபகுதிக்கு அழைத்துச்சென்று விட யூசுப் இதுப்போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. அகில் என்பவர் மருத்துவமனையில் இருந்து இருச்சக்கரவாகனத்தில் திரும்பி வரும்போது இந்த காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார். முதலில் நாய் காரை சேஸ் செய்வதாக அகில் நினைத்துள்ளார். பின்னர், அருகே செல்லும்போதுதான் நாய் காரில் கட்டப்பட்டிருந்தது தெரியவந்ததாக குறிப்பிட்டார்” எனத் தெரிவித்தனர்.
Loading More post
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி