அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் குருதி ஆட்டம். இப்படத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 8ம் தேதி வெளியானது.
அந்த போஸ்டரில் முதுகில் கத்திகள் இருக்க ரத்தம் சொட்ட சொட்ட நின்றிருந்தார் அதர்வா. தொடர்ந்து அதர்வா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.
Here is the teaser of #KuruthiAattam - https://t.co/tlwkhmVB6p
Gonna be a solid action film??
Wishing the best to @Atharvaamurali , director @sri_sriganesh89 @thisisysr sir @priya_Bshankar @realradikaa mam and entire team for a huge success ??? — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 11, 2020
இந்நிலையில், குருதி ஆட்டம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். டீஸர் “நம்மல மீறி உள்ள வாந்தாங்கல... அவிங்க மதுரையை தாண்டி வெளிய போகக்கூடாது” என்ற ராதிகாவின் குரலில் ஆரம்பிக்கிறது. டீஸர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகளே இடம்பெற்றுள்ளன. வழக்கம்போல் யுவன்சங்கர் ராஜா மியூசிக் மிரட்டியுள்ளது. மதுரைக்களத்தில் மற்றுமொரு ஆக்ஷன் படமாக குருதி ஆட்டம் இருக்குமென்பது டீஸரில் தெரிகிறது. இயக்குநர் ஸ்ரீகணேஷுக்கும் அவரது திரைப்பட குழுவுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai