[X] Close

சென்னை: சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி திமுக போராட்டம்

தமிழ்நாடு

DMK-Protest-to-remove-customs

சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்தினர். 

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஆறு சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தலைமையில் துரைப்பாக்கம் சுங்கச்சாவடி அருகே நடந்த போராட்டத்தில், திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Advertisement

சட்டவிதிகளுக்கு புறம்பாக, பெருங்குடி, துரைப்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அதனை அகற்றக்கோரி திமுக எம்.பிக்கள் மத்திய, மாநில அரசை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Advertisement

Advertisement
[X] Close