நடிகர் ஆர்யா தனது 40 வது பிறந்தாளை சார்பட்டா பரம்பரை படக்குழுவினருடன் கொண்டாடினார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, துஷாரா, கலையரசன், காளி வெங்கட் ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சார்பட்டா பரம்பரை ”. சென்னையின் 90 களில் நடந்த பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்திற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, 8 பேக் உடற்கட்டுடன் தன்னை தயார்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
அண்மையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டரில் ஒரு பாக்ஸருக்கான் கன கச்சித உடற்கட்டுடன் ஆர்யா தோன்றியிருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி நடிகர் ஆர்யா தனது 40 வது பிறந்தாளை சார்பட்டா பரம்பரை படக்குழுவினருடன் கொண்டாடினார்.
படத்தின் போஸ்டரை கமல்ஹாசனிடம் காண்பித்து உரையாடிய ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “இதை விட தனக்கு சிறந்த பிறந்த நாள் பரிசு இருக்க முடியாது” என ட்விட் செய்திருந்தார்.
இந்நிலையில் இன்று தனது 40 வது பிறந்தநாளை சார்பட்டா பரம்பரை படக்குழுவினருடன் ஆர்யா கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading More post
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
'மொழி அரசியலில் ஈடுபடும் எதிர்க்கட்சிகள்' - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
'ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி' - வேதாந்தாவின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்