கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் ரூ 62 கோடி குறைந்ததாக தேவஸம்போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வார நாட்களில் தினசரி 1000 பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 2 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
சாமியை தரிசிக்க, பக்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் கோரிக்கை விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி முதல் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் கடந்த ஆண்டைபோல் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், சபரிமலைக்கு வரும் வருமானம் மிகவும் குறைந்து உள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதியில் இருந்து 23 நாட்களில் நடை வருமானமாக ரூ.3 கோடியே 82 லட்சம் மட்டுமே கிடைத்து உள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாததால், சபரிமலைக்கு பக்தர்கள் வந்து குவிந்தனர். அதைத்தொடர்ந்து கோயில் நடை திறந்து 23 நாட்களில் நடை வருமானமாக ரூ.66 கோடி கிடைத்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ரூ.62 கோடி வருவாய் குறைந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!