"எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால், அதற்கு அன்று பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் 139-வது பிறந்தநாளை இன்று அனைத்து தரப்பினரும் கொண்டாடி வரும் நிலையில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், பாரதியாரின் உருவப் படத்திற்கு மலர்கள்தூவி மரியாதை செலுத்தியது, பாரதியார் வேடமிட்ட குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாரதியாரின் நினைவைப் போற்றியுள்ளார்.
இந்திய சுதந்திரத்திற்காகவும் பெண்கள் உரிமைகளுக்காகவும் தனது கவிதைகளால் போராடியவர் பாரதியார். செய்யுள் வடிவில் இருந்த கவிதைகளை அனைவருக்கும் புரியும்படி எழுதி விடுதலையுணர்வை ஊட்டியதில் இவரது எழுத்துக்கு முக்கியப் பங்குண்டு.
தமிழகத்தின் பெருமை என்று கொண்டாடப்படும் பாரதியார் 1982 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் இதே டிசம்பர் 11 ஆம் தேதிதான் பிறந்தார். அவரது, 139-வது பிறந்தநாளைக் தமிழகம் முழுவதும் கொண்டாடி வரும் வேளையில், தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர். தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு அன்று மகாகவி பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்... மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தில் அவர்தம் நினைவை போற்றுவோம்...#bharathiyar pic.twitter.com/3hP7BXPkXS — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) December 11, 2020
”எங்களைப் போன்ற பெண்களெல்லாம் இன்று முன்னுரிமை பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு அன்று மகாகவி பாரதியார் பாடிய பெண்ணுரிமைதான் காரணம்... மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தில் அவர்தம் நினைவை போற்றுவோம்” என்று பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?