Published : 10,Dec 2020 02:30 PM
நடிகை சித்ராவின் 'மரணம்' தற்கொலையே: காவல்துறை தகவல்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தற்கொலைதான் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து சித்ராவின் உடல் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. அவரது உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது தந்தை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நடிகை சித்ராவின் மரணம் கொலையா தற்கொலையா என விவாதிக்கப்பட்ட நிலையில். பிரேத பரிசோதனையின் முதல்கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலைதான் செய்துக்கொண்டதாக காவல்ததுறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையதுதான் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தன் மகளை கோழையாக வளர்க்கவில்லை எனவும், அவரை அடித்துக் கொன்றுவிட்டார்கள் எனவும் சின்னத்திரை நடிகை சித்ராவின் தாயார் உணர்வுபூர்வமாக கூறினார். முழுமையாக வாசிக்க > "என் மகளை கோழையாக வளர்க்கவில்லை; இது கொலைதான்!" - சித்ராவின் தாய் கதறல்
இதனிடையே, சித்ராவிற்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், சக நடிகர் நடிகைகளிடமும், உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.