[X] Close

எனக்கொரு பொம்மை கிடைச்சாச்சு: ஜடேஜா ஹேப்பி!

Ravindra-Jadeja-catches-first-glimpse-of-daughter

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு சமீபத்தில் பெண்குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் ஜடேஜா சாம்பியன்ஸ் கோப்பைக்காக இங்கிலாந்தில் இருந்தார். அடுத்து அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம். இதனால் தனது ஆசை மகளை அவரால் பார்க்க முடியவில்லை. தினமும் மனைவி ரீவா சோலங்கியிடம் மகள் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். இப்போது இந்தியா திரும்பிய ஜடேஜா, மகளைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘வித்தியாசமான உணர்வுடன் இருக்கிறேன். எனது குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். கிரிக்கெட் ஆடிவிட்டோ அல்லது வெளியே சென்றுவிட்டோ வீட்டுக்குத் திரும்பினால் சில நேரங்களில் போரடிக்கும். இப்போது அப்படியில்லை. எனக்கொரு பொம்மை கிடைத்திருக்கிறது. இனி எனக்கு இவள்தான் டைம்பாஸ். இங்கிலாந்தில் இருந்த போது மகள் பிறந்த செய்தி அறிந்து மகிழ்ச்சியானேன். உடனே பார்க்க முடியவில்லை என்பதால் மனசு கஷ்டமாக இருந்தது. ஆனாலும் நாட்டுக்காக கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு சிலருக்கு மட்டும்தான் கிடைக்கிறது. அதனால், இது முக்கியம் என்பதை உணர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினேன்’ என்றார்.


Advertisement

Advertisement
[X] Close