சென்னை கோடம்பாக்கத்தில் சாலை பள்ளத்தில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தார் எனக்கூறப்பட்ட நிலையில் மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். (56) இவர் கார் ஓட்டுநராக இருந்து வந்தார். இன்று பணிக்கு செல்வதற்காக கோடம்பாக்கம் மேம்பாலத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு கழிவுநீரும் மழைநீரும் சாலையோரமாக தேங்கியிருந்தது. அதேபோல் பாதாள சாக்கடையும் பாதி திறந்த நிலையில் இருந்தது.
இதையறியாமல் நடந்து வந்த நரசிம்மன் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகராட்சியின் அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும் சாலையில் சாக்கடையை சரியாக மூடாததும் இதற்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், கோடம்பாக்கத்தில் மழைநீர் பள்ளத்தாலோ, கழிவுநீர் பள்ளத்தாலோ ஓட்டுநர் நரசிம்மன் இறக்கவில்லை எனவும் அவரது மரணத்திற்கு வேறு காரணம் இருக்கக்கூடும் எனவும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நரசிம்மன் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது அந்த குறிப்பிட்ட சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!