சென்னை: வருமான வரித்துறை அதிகாரி கார் மோதி கர்ப்பிணி உயிரிழப்பு!

சென்னை: வருமான வரித்துறை அதிகாரி கார் மோதி கர்ப்பிணி உயிரிழப்பு!
சென்னை: வருமான வரித்துறை அதிகாரி கார் மோதி கர்ப்பிணி உயிரிழப்பு!

சென்னை வில்லிவாக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைவில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியைச் சேர்ந்த கௌசிபீ, 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கௌசிபீ வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு, ஸ்கேன் அறிக்கைகளை வீட்டருகே உள்ள துணிக்கடையில் பணிபுரியும் கணவரிடம் காண்பித்துவிட்டு நடந்துசென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த வருமானவரித்துறை LOGO ஒட்டப்பட்ட வாகனம், கௌசிபீ-யின் பின்னால் பலமாக மோதியுள்ளது.

இந்த கோர விபத்தில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்ட கர்ப்பிணி கௌசிபீ, நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை இயக்கிய பெண்மணி நிகழ்விடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த திருமங்கலம் காவல்துறையினர் தப்பியோடிய பெண்ணைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com