[X] Close

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு

சினிமா

actor-sarath-kumar-tested-positive-for-covid-19

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய  கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரர் பாகுபாடில்லாமல் அனைவரையும் பாதித்து வருகிறது. இதனால், அனைத்து தரப்பினரும் எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார்கள். நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய மகன் அபிஷேக் பச்சன், பிரித்விராஜ், இயக்குநர் ராஜமெளலி, நடிகை தமன்னா, நிக்கி கல்ராணி என சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மீண்டு வந்திருக்கிறார்கள்.

image


Advertisement

இந்நிலையில், ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த சரத்குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இதுகுறித்து, அவரது மனைவி ராதிகா சரத்குமார், “ ஹைதராபாத்தில் இருக்கும் சரத்திற்கு இன்று கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் நல்ல உடல் நலத்துடனும் சிறப்பான மருத்துவர்களின் சிகிச்சையிலும் இருக்கிறார். அடுத்தடுத்த நாட்களில் அவரின் உடல்நிலைக் குறித்த தகவல்களை நானே தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரைத்தொடர்ந்து சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close