Published : 08,Dec 2020 04:00 PM
காற்றில் பறந்தபடி சிக்ஸரை தடுத்த சஞ்சு சாம்சன்... ஃபீல்டிங்கில் மாஸ்!

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது டி20 போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி விளையாடிய முதல் இன்னிங்ஸின் 14 வது ஓவரை தாக்கூர் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பெரிய சிக்ஸர் அடிக்க முயன்று பந்தை லாங் ஆன் திசையில் பறக்க விட்டார் ஸ்ட்ரைக்கில் இருந்த மேக்ஸ்வெல். இருப்பினும் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் காற்றில் பறந்த படி பந்தை தடுத்து, மைதானத்திற்குள் வீசினார். அதனால் ஆறு ரன்கள் எடுத்திருக்க வேண்டிய பந்தில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்தது ஆஸ்திரேலியா.
Just another day in the office for Sanju Samson. pic.twitter.com/MI3DnIQSIY
— Johns. (@CricCrazyJohns) December 8, 2020
இதே போல நியூசிலாந்து தொடரிலும் பிரதான விக்கெட் கீப்பரான சஞ்சு அசத்தலாக காற்றில் பறந்தபடி பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் கேட்ச் பிடிக்கவும், பவுண்டரிகளை தடுக்கவும் தவறியிருந்தனர்.
Outstanding fielding by Sanju Samson yet again, he saved 4 runs for the team. pic.twitter.com/lFyO4nzi4c
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 8, 2020