[X] Close

‘காலா’வுக்கு எதிரான வழக்கு: பதிலளிக்க ரஜினிக்கு அவகாசம்

Kaala-movie-title-issue--Rajinikanth-has-to-answer-in-7-days

நடிகர் ரஜினி நடிக்கும் காலா படத்தின் பெயருக்கு தடை கோரிய வழக்கில், ரஜினி தரப்பிற்கு மீண்டும் அவகாசம் வழங்கி சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் 'காலா என்ற கரிகாலன்'. படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு உரிமை கோரி ராஜசேகரன் என்ற உதவி இயக்குநர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க ரஜினி மற்றும் பா.ரஞ்சித் ஆகியோருக்கு மீண்டும் 7 நாள்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close