கோட் ஷூட்டில் ஸ்டைலிஷ் லுக்கில் தனது சமூக வலைதளங்களில் சிம்பு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.
நடிப்பு மட்டுமல்ல; நடனம், உடையிலும் எப்போது அப்டேட்டாக இருப்பவர் சிம்பு. ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின்போது உடல் பருமனாக காட்சியளித்தவர் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி ஸ்லிம் லுக்கிற்கு மாறி ரசிக்க வைத்தார்.
அதனால், அவர் எப்போது சமுக வலைதளங்களுக்கு மீண்டும் வந்தாரோ அப்போதிலிருந்தே, சிம்புவின் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களையும் சினிமாத்துறையினரையும் உற்றுநோக்க வைக்கின்றன; வைரலாகின்றன. அதுமட்டுமே காரணம் அல்ல. எடையைக் குறைத்த உடலோடு கடகடவென்று ஈஸ்வரன், மாநாடு பட ஷூட்டிங்குகளையும் முடித்து ’குட் பாய்’ என்று பெயர் எடுத்து வருவதாலும் அவரை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். தற்போது கெளதம் கார்த்திக்குடன் இணைந்து புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி முதல் பாண்டிச்சேரியில் மாநாடு ஷூட்டிங் துவங்கியது. அதிலிருந்தே, அப்படத்தின் வித்தியாசமான கெட்டப்புகளில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் சிம்பு. ஷூட்டிங் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் தங்கை குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இன்று மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதேபோல, சிம்புவும் தனது சமூக வலைதளங்களில் மூன்று புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களில் கோட் ஷூட்டுடன் தலையில் ஃபங்க் வைத்து வித்தியாச கெட்டப்பில் வாவ் சொல்ல வைக்கிறார். இந்தப் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்