[X] Close

கர்ப்பிணிக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலி: 108 ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை!

தமிழ்நாடு

Sudden-labor-pains-during-pregnancy-baby-boy-born-in-108-ambulance

அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழியில், நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது.


Advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி உடைய சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி முத்துலட்சுமி (22). முத்துட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

image


Advertisement


இதனையடுத்து திருச்சுழி அரசு மருத்துவமனையில் உள்ள 108 அவசர ஊர்திக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் அழைப்பை ஏற்று உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நாராயணசாமி மற்றும் மருத்துவ உதவியாளர் அன்புராஜ் இருவரும் கர்ப்பிணி பெண்ணை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், முத்து லட்சுமிக்கு தீவிர பிரசவ வலி  ஏற்பட்டுள்ளது.

உடனே ஆம்புலன்ஸை நிறுத்தி அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவியாளர் அன்புராஜ் 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தையும், தாயும் நலமுடன் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறப்பாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனரையும் மருத்துவ உதவியாளரையும் மருத்துவர்கள் மற்றும் கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.


Advertisement

Advertisement
[X] Close