டி 20 கிரிக்கெட் தொடர் வெற்றி குறித்து இது மறக்கமுடியாத ஸ்பெஷலான ஒன்று என நடராஜன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் மன்னன் தங்கராஜ் நடராஜன் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணி உடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கிய அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்திய அணியின் வெற்றிக்காக பங்களிப்பு டி20 போட்டிகளிலும் தொடர்கிறது.
முதல் டி20 போட்டியில் 3 விக்கெட் எடுத்தார் நடராஜன். இரண்டாவது டி20 போட்டியில், இந்தியாவுக்காக நடராஜன் 4 ஓவர் வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசும் நடராஜனுக்கு உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்குமா என பலரும் எதிர்பார்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தன்னுடைய முதல் டி20 தொடர் குறித்து நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், என் நாட்டிற்காக முதல் தொடர் வெற்றி. இது மறக்கமுடியாதது; ஸ்பெஷலானது எனப் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்
First series win for my country ?
Meorable and special ☺️ #TeamIndia pic.twitter.com/18YBdW43cd
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!