[X] Close

அண்ணனிடம் ஆசிபெற்ற ரஜினி: அடுத்தக்கட்ட பணிகள் என்ன?

தமிழ்நாடு,தேர்தல் களம்

Rajinikanth-bengaluru-visit-to-get-brother-blessings

பெங்களூருவில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ரஜினி ஆசி பெற்றார்.


Advertisement

கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து விரைவில் முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார்.

image


Advertisement

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி “ஜனவரியில் கட்சித் துவக்கம். டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’’ என ட்வீட் செய்தார். பின்னர் கட்சி வேலைகள் தீவிரமாக நடைபெறுவதாக தெரிகிறது.

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ரஜினி ஆசி பெற்றார். பெங்களூருவுக்கு சென்றுள்ள அவர், வரும் 14 ஆம் தேதி வரை அங்கு தங்கியிருந்து புதுக்கட்சித் தொடர்பாக முக்கிய பிரமுகர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால், வரும் 12 ஆம் தேதி தனது பிறந்த நாளை பெங்களூருவில் உள்ள அண்ணன் சத்யநாராயணன் வீட்டில் கொண்டாட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, ஹைதராபாத்தில் நடைபெறும் 'அண்ணாத்த' படப்பிடிப்பில் 15ஆம் தேதி கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close