இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை.!

இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை.!
இன்று கூடுகிறது புதுச்சேரி சட்டப்பேரவை.!

புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே மோதல் நீடிக்கும் நிலையில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இக்கூட்டத்தில் ஆளுநர் உரை இருக்காது என்றே கூறப்படுகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் துணைநிலை ஆளுநர் இடம்பெறுவது மரபு. ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே ஆளுநர் உரை இடம்பெறும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்துள்ளதால், இன்று கூடும் கூட்டத்தில் ஆளுநர் உரை இருக்காது எனக் கூறப்படுகிறது.

சில நாள்களே நடக்க உள்ள பேரவைக் கூட்டத்தில் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல், அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதிய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com