[X] Close

டெல்லி: போராட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழில் விவரித்த பஞ்சாப் விவசாயி

இந்தியா

Delhi-farmers-Protest-continue-for-the-11th-day

போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தால்தான் வீட்டிற்கு திரும்புவோம் என டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி டெல்லியில் போராடி வரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நேற்று நடத்திய 5ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தால்தான் வீட்டிற்கு திரும்புவோம் என உறுதிபட கூறி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை 11-வது நாளாக தொடர்கின்றனர்.

image


Advertisement

இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழ் பேசும் பஞ்சாப் விவசாயி கோல்டன் கூறும்போது, “ தமிழகத்தின் மதுக்கரையில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். தற்போது பஞ்சாப்பில் தாத்தா, அப்பாவுடன் விவசாயம் செய்து வருகிறேன். குடும்பமே விவசாயம்தான் செய்து வருகின்றனர்.

நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் 9-ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். எம்எஸ்பிக்கு அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது மட்டும் போதாது. எங்களுக்கு அனைத்து வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடையும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தொடர்ந்து விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close