Published : 12,Jul 2017 04:45 PM

உண்மையாக உழைப்போம்: விஷால் கடிதம்

Vishal-letter-to-Nadigar-sangam-members

எந்த நோக்கத்திற்காக பொறுப்புக்கு வந்தோமோ அந்த நோக்கம் நிறைவேறும் வரை உண்மையாக உழைப்போம் என நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து, அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனிடையே, நடிகர் சங்க கட்டடத்திற்காக 33 அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனால், நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சங்கத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில், 100 சதவீத நீதி நமக்கு கிடைக்கும் எனவும், எந்த நோக்கத்திற்காக நாங்கள் பொறுப்புக்கு வந்தோமோ அந்த நோக்கம் நிறைவேறும் வரை உண்மையாக உழைப்போம் எனவும் அந்தக் கடிதத்தில் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்