Published : 04,Dec 2020 09:11 AM
நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - கனமழை தொடர வாய்ப்பு!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த புயல், நீண்டநேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Deep Depression over Gulf of Mannar at 0530 IST today is close to Ramanathapuram District coast remained practically stationary, about 40 km southwest of Ramanathapuram, 70 km west-southwest of Pamban . The associated wind speed is about 55-65 gusting to 75 kmph. pic.twitter.com/UTnITPHjjB
— India Meteorological Department (@Indiametdept) December 4, 2020
வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயல் இலங்கையின் திருகோணமலை வழியே கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது.ராமநாதபுரத்தில் அருகே உள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி ஆழ்ந்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரத்திற்கு 40 கிமீ தொலைவிலும், பாம்பனுக்கு 70 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 60 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் பல மணிநேரம் நீடிப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.