Published : 29,Nov 2020 06:03 PM
சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 22000 ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை!

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து விதமான கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் ரன் மழை பொழிவார்.
22000 international runs for King Kohli ??#TeamIndiapic.twitter.com/ulWqBZ3tuM
— BCCI (@BCCI) November 29, 2020
இதுவரை மொத்தமாக 418 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அதிவேகமாக 22,000 ரன்களை கடந்துள்ளார். ஆஸ்திரேலியாவுடனான இன்றைய ஆட்டத்தில் இந்த சாதனையை கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன்னனதாக டிராவிடும், சச்சினும் இந்தியாவுக்காக 22,000 ரன்களை கடந்துள்ளனர். அதேபோல குமார் சங்கக்கரா, பாண்டிங், ஜெயவர்த்தனே, கல்லிஸ் மற்றும் லாரா மாதிரியான பேட்ஸ்மேன்கள் சர்வதேச போட்டிகளில் 22,000 ரன்களை கடந்துள்ளனர். அதில் சச்சின் 34,357 ரன்களுடன் முன்னிலையில் உள்ளார்.