Published : 29,Nov 2020 03:59 PM

புரபோஸ் செய்த இந்திய இளைஞர்; ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண் - IndVsAus மேட்ச்சில் ருசிகரம்

Indian-boy-Proposed-Australian-girl---Boy-proposed-Girl-Ind-vs-Aus

இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய இளைஞரும் ஆஸ்திரேலிய இளம்பெண்ணும் தங்களது காதலை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. அதில் நேற்று முன்தினம் நடைபெற்று முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 2-ஆவது போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்களை எடுத்தது. அந்த அணியில் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மார்னஸ் லபுஷானே மற்றும் கிளென் மேக்ஸ்வெல் என நால்வரும் அரை சதமடித்தனர். ஸ்டீவ் ஸ்மித் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.

image

இதையடுத்து 390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 30 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதனிடையே இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண் ஒருவரிடம், ஸ்டேடியத்திற்குள் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்லியுள்ளார். இதையடுத்து கிரிக்கெட் ஆரவாரத்துடன்,அந்த காதல் ஜோடி கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதற்கு ‘ஆட்டத்தை வேண்டுமானால் ஆஸ்திரேலியா கைப்பற்றலாம். ஆனால் ஆஸ்திரேலிய பெண்ணை நான் தான் கைப்பற்றுவேன் என்ற குறிக்கோளோடு இவர், ஸ்டேடியத்திற்குள் சென்றிருப்பார் போலும்‘ என சமூக வலைத்தளங்களில் பலரும் நகைச்சுவையாக கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்