
இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோர் அரைசதமடித்தனர்.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்தப் போட்டியில் ஆஸி அணியில் ஸ்டொய்னிஸ்க்கு பதிலாக மோய்சஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது.
ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச் - டேவிட் வார்னர் ஜோடி கடந்தப் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடியது. முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதமடித்தனர். கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வருகின்றனர்.
ஒருவழியாக 23 ஆவது ஓவரில் முகமது சமி பந்துவீச்சில் ஆரோன் பின்ச் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.