போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சங்கரசுப்பு வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில் போராடியவர்கள் மீது எவ்வித வழக்கும் பதியக்கூடாது எனவும் தடியடி நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வு முன் அவசர வழக்காக வந்தது.
அப்போது வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 19ஆம் தேதி வரை மாணவர்கள் மட்டுமே போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாக கூறினார்.
அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, போராட்டம் என்ற பெயரில் சட்டத்தை மீறினால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், அமைதியாக போராடியவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். மேலும், போராடியவர்கள் மீது எவ்விதவழக்கும் பதியக்கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட முடியாது எனவும் நீதிபதி கூறினார்.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?