Published : 12,Jul 2017 08:33 AM

இன்றும் மழை இருக்கு: வானிலை மையம் அறிவிப்பு

rainfall-today

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை விடிய விடிய பெய்தது. இன்றும் காலை முதல் சென்னையில் ஆங்காங்கே பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

நேற்று அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 1.7 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வெப்பச்சலனம் நிலவுவதால், சென்னை பெருநகரம் முழுவதும் மேகமூட்டமாகவே காட்சியளிக்கிறது. மேலும் இன்று மாலையும், இரவும் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்