சதமடித்தார் ஆரோன் பின்ச்... அசுர பலத்தில் ஆஸ்திரேலியா!

சதமடித்தார் ஆரோன் பின்ச்... அசுர பலத்தில் ஆஸ்திரேலியா!
சதமடித்தார் ஆரோன் பின்ச்... அசுர பலத்தில் ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் சதமடித்தார்.

இந்திய - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து கோலி தலைமையிலான இந்திய அணி பவுலிங் செய்கிறது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பின்ச்சும், டேவிட் வார்னரும் களமிறங்கினர்.

தொடக்கத்தில் இருந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும் நிதானமாக ரன்களை சேர்த்து வந்தனர். இதனால் இந்திய பவுலர்கள் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில் டேவிட் வார்னர் 69 ரன்கள் எடுத்திருந்தபோது முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆரோன் பின்ச் சிறப்பாக விளையாடி தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார்.

இதனையடுத்து 114 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 40 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா தொடர்ந்து விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com