Published : 12,Jul 2017 08:31 AM
பிக்பாஸ்.. கமல்ஹாசனை கைது செய்யக் கோரி மனு

நடிகர் கமல்ஹாசன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடைசெய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மனு அளித்துள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியினர் அளித்துள்ள அந்த புகார் மனுவில், சமூகச் சீர்கேடுகளுக்கு வித்திடும்வகையில் நிகழ்ச்சி இருப்பதால் அதனை நடத்தும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை கேலிசெய்யும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்ததது. எனவே இந்த நிக்ழ்ச்சிக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பம் முதலே பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.