தனது ரசிகரின் பிறந்தநாளுக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பி ரசிகரை நெகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழின் முன்னணி நடிரானார் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், நானும் ரெளடிதான், சேதுபதி, சீதக்காதி, தர்மதுரை, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா, செக்கச்சிவந்த வானம், பேட்ட, சூப்பர் டீலக்ஸ், 96 என நடிப்பில் தெறிக்கவிட்டவர், தற்போது விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் கெத்து காட்டியுள்ளார்.
ரஜினி, விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது போலவே விஜய் சேதுபதிக்கும் ரசிகர் மன்றங்கள் உள்ளன. அதன் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில்கூட ஆயுத பூஜையை முன்னிட்டு திண்டிவனம் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தினர், ஆட்டோ டிரைவர்கள் 100 பேருக்கு புதிய சீருடைகள், விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேருதவி புரிந்தனர். ரசிகர்கள் மட்டுமல்ல; விஜய் சேதுபதியும் மக்களின் உண்மையான செல்வன் என்பதை அடிக்கடி உணர்த்தும் விதமாக ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருபவர். சமீபத்தில்கூட மறைந்த நடிகர் தவசிக்கு 1 லட்சம் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் ரசிகர்கள் பிறந்தநாளுக்கு வீடியோ அனுப்பி வாழ்த்து தெரிவிப்பதில்லை. ஆனால், விஜய் சேதுபதி செங்கல்பட்டு மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த விக்னேஷின் பிறந்தநாளுக்கு செல்ஃபி வாழ்த்து அனுப்பி பிறந்தநாளை சிறந்த நாளாக்கிவிட்டார்.
This alone is enough for this moment and to this day ❤
Love u @VijaySethuOffl anna ❤
Thanks to all#VijaySethupathi#fridaymorning pic.twitter.com/EWj8KtYlZD — ?????? ?.??????? (@Bulletvikki) November 27, 2020
இதனை, விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த வீடியோவில், விஜய் சேதுபதி “டேய் விக்கி பிறந்தநாள் வாழ்த்துகள்டா. நல்லா இரு;சந்தோஷமா இரு” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்