மோட்டோ இ4பிளஸ் விற்பனை தொடங்கியது

மோட்டோ இ4பிளஸ் விற்பனை தொடங்கியது
மோட்டோ இ4பிளஸ் விற்பனை தொடங்கியது

மோட்டோரோலா நிறுவனத்தின் அதிக பேட்டரி திறன் கொண்ட மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்ஃபோன்களில் லெனோவோ நிறுவனத்தின் மோட்டோ வகை ஃபோன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு உள்ளது. அந்த வகையில் மோட்டோரோலா நிறுவனத்தின் வெற்றி பாதையில் மோட்டோ இ4 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
 
இந்த ஃபோனின் சிறப்பம்சங்கள் 

5.5 இன்ச் எச்டி 720x1280 பிக்சல் டிஸ்ப்ளே
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 427 சிப்செட்,
2 ஜிபி ரேம், 
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
13 மெகாபிக்சல் ரியர் கேமரா
5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா
எல்இடி பிளாஷ் 
அதிக திறன் கொண்ட நான்-ரிமூவபிள் 5000 எம்ஏஎச் பேட்டரி

விலை - 11,600 

இந்த ஸ்மார்ட்ஃபோன் ஐயர்ன் கிரே, ஃபைன் கோல்டு உள்ளிட்ட வண்ணங்களிலும், 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரியிலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com