[X] Close

பிசிசிஐ சீர்திருத்தத்திற்கு முன்னாள் நிர்வாகிகள் முட்டுக்கட்டை - பரபரப்பு புகார்

BCCI---COA-REPORT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் சீர்திருத்‌தங்களை மேற்கொள்ள, என்.ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் முட்டுக்கட்டையாக உள்ளனர் என நிர்வாகக் குழு குற்றம்சாட்டியுள்ளது.


Advertisement

லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.ஸ்ரீநிவாசன், நிரஞ்சன் ஷா உள்ளிட்ட சில நிர்வாகிகள், சொந்த ந‌லனுக்காக நிர்வாக சீர்திருத்தங்களைச் செய்ய விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள் சங்கத்தினை உருவாக்கும் குழுவில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்றும் நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது. 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் கிரிக்கெட் வாரிய நிர்வாக பொறுப்புகளில் இருக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை லோதா கமிட்டி முன்வைத்தது. இதனை அமல்படுத்த முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் நிர்வாக குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close