Published : 26,Nov 2020 08:54 AM

"பாதிப்புகளை என்னிடம் தெரிவிக்கலாம்"- மக்களிடம் செல்போன் நம்பரை கொடுத்த அமைச்சர்

Minister-Benjamin-inspected-the-nivar-cyclone-affected-areas

ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், கூவம் நதிக்கரையோரம் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

நிவர் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

இந்த நிலையில் கூவம் நதிக்கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் மழைநீர் தேங்கிய மற்றும் மரங்கள் விழுந்த இடங்களில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு மேற்கொண்டார்.

image

அப்போது குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் அதிகாரிகளுடன் நடந்து சென்று அங்குள்ள மழைநீரை அகற்றுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மழைநீர் சூழ்ந்துள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் மழை நீர் வடிந்த பிறகு வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தினார்.

image

அதுமட்டுமின்றி மருத்துவ குழு, அம்மா உணவகம், படகு ஆகியவை தயார் நிலையில் இருப்பதாகவும் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவித்துள்ள அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது தன்னுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தனக்கு நேரடியாக தெரிவிக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் தனது செல்போன் நம்பரையும் கொடுத்தார்.

மேலும், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என மழை நீர் தேங்கி உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று அறிவுறுத்தினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்