[X] Close

கபாலி, தெறி சாதனையை முறியடித்த விவேகம் டீசர்!

Kabali--Teaser-of-the-breakthrough-record-breakthrough-teaser-

யூடியூப்பில் வெளியான விவேகம் டீசர்  4 லட்சத்து 65 ஆயிரம் லைக்குகளைப்பெற்றுள்ளது. இதன் மூலம் அதிக லைக்குகளை பெற்ற முதல் தென்னிந்திய டீசர் என்கிற பெருமையை பெற்றுள்ளது. 
2017ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதி முழுவதும் அஜீத் நடித்த விவேகம் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்  விவேகம் படத்தின் டீசர் வெளியாகி அதிகமானோர் பார்க்கப்பட்ட டீசர்  என்கிற சாதனையை நிகழ்த்தியது. இதுவரை 1 கோடியே 88 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். தற்போது 4 லட்சத்து 65 ஆயிரம் லைக்குகளை இந்த டீசர் எட்டியுள்ளது. முன்னதாக கபாலி டீசர் 4 லட்சத்து 63 ஆயிரம் லைக்குகளையும், தெறி டீசர் 3 லட்சத்து 15 ஆயிரம் லைக்குகளையும் பெற்றிருந்தன. அந்த சாதனையை விவேகம் டீசர் முறியடித்துள்ளது. சிவா இயக்கத்தில் இந்தப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close