Published : 12,Jul 2017 07:05 AM
தலைக்கவசம் அணிந்து ஏடிஎம் கேமராவை உடைத்த நபர் (வீடியோ)

நாகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ATM-க்குள் தலைக்கவசம் அணிந்து வந்த ஒருவர், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சட்டை அணியாமலும், தலைக்கவசம் அணிந்து கொண்டும் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் ஒருவர் நுழைந்து, ஏடிஎம் இயந்திரத்தை வெகுநேரம் இயக்குவதோடு, இயந்திரத்தின் பின்புறம் சென்று பார்ப்பது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகியுள்ளன. பின்னர், தலைக்கவசத்தை எடுத்துவிட்டு கண்காணிப்பு கேமராவை உடைக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.