Published : 25,Nov 2020 12:00 PM

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டது!

Chembarambakkam-lake-opened-due-to-nivar-cyclone

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் இன்று திறக்கப்பட்டது.

நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கு இடையே புயல் கரையை கடக்க உள்ளது. இதனிடையே தொடர்ந்து பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 22 அடியை நெருங்க உள்ளது. இதனால் இன்று மதியம் 12 மணியளவில் முதல்கட்டமாக 1000 கன அடி நீரை வெளியேற்ற அரசு உத்தரவிட்டது.

அதன்படி இன்று மதியம் 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனிடையே செம்பரம்பாக்கம் பகுதியில் 15 முதல் 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட செல்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்