Published : 25,Nov 2020 10:07 AM

சென்னை காசிமேட்டில் கடல் கடும் கொந்தளிப்பு: லைவ் ரிப்போர்ட்!

சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

நிவர் புயல் காரணமாக கடலூர், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் குறித்து லைவ் ரிப்போர்ட்.

image

நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் இரண்டு நாட்களாகவே அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இன்று காலை முதல் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமாக காணப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்